ரேவேனன்ட் – பனிக்குழி மறுபிறப்பு

The-Revenant-2

ரேவேனன்ட் ஒரு சர்வைவல் படம் . 1800 களில் அமெரிக்காவின் எல்லைப்ராந்தியத்தில் நடந்த பல தனி மனித சாகசப் போராட்டக் கதைகளில் இதுவும் ஒன்று. கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பிய நாகரீகம் அமெரிக்காவில் தன் எல்லையை விரிவாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், அவர்களுக்கும் அமெரிக்காவில் தொன்றுதொட்டு வாழ்திருந்த பழங்குடி மக்களுக்கும் இடையே நடக்கும் மோதல். இரு புறமும் வஞ்சம் தீர்த்துக்கொள்ள மாறி மாறி உக்கிரத் தாக்குதல்கள். இதற்கிடையில் சிக்கிக்கொண்ட ஒரு வெள்ளையனின் வாழ்வுப் போராட்டம்.

பிளாட்டே ஆற்றின் வனப் பகுதியில் கரடி, நீர்நாய் போன்றவற்றை வேட்டை ஆடி, அவற்றின் மென்மயிர் தோலை கம்பளி செய்வதற்காக விற்கும் அமெரிக்க வேட்டையர்கள் கூட்டத்திற்கு வழிகாட்டியாக செல்கிறான். அவன் சொந்த கூட்டாளிகளே அவனை பனி மலை பகுதியில் கைவிட்டு விடும் ஒரு நிகழ்வு. சுவாசத்தை இறுக செய்யும் குளிர்…எங்கும் சூழ்ந்திருக்கும் பழங்குடி வீரர்களின் அச்சுறுத்தல்…குத்துயிராய் நிரயுதபானியாக 300 கீமி அப்பால் உள்ள தன முகாமை சென்றடைவானா?

அமெரிக்க பழங்குடி  இனகுக்ழுகள்  நூற்றுக்கணக்கானவை. வேட்டையாடியும்  விவசாயம் செய்தும் உயிர் வாழ்ந்தனர் . இனத்தொகை பெருகப் பெருக பிற குழுக்களுடன் வேட்டைநிலங்களுக்காகவும் விளைச்சல் நிலங்களுகாகவும் சண்டையிட்டு வந்தனர். அவ்வவ்போது சமரசங்களும் உண்டு.  ஐரோப்பிய காலனியர்கள் அமெரிக்காவில் நுழைந்த பின்பு இந்த பூர்வீககுடிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கின. அதற்கு இரண்டு காரணங்கள் – ஐரோப்பியர்களிடம் இருந்து பற்றிக்கொண்ட அம்மை போன்ற தோற்று நோய்கள். நிலத்துக்காகவும், இயற்க்கை வளங்களுக்காகவும்  ஐரோப்பியர்கள் மேற்கொண்ட இனபடுகொலை.

indian-land-for-sale

bisonskulls

இருப்பினும் தங்கள் குலம் எப்படியாவது தழைக்க பல்வேறு பழங்குடி தலைவர்கள் வெள்ளையர்களுடன்  சின்ன சின்ன சமரசங்களும், ஒப்பந்தங்களும் செய்து கொண்டனர். வேட்டையாட, போர் புரிய தேவைப்பட்ட குதிரைகாகவும், நவீனத் துப்பாகிகாகவும் அவர்களின் உரிமைகளையும், உடமைகளையும் விட்டுக்கொடுத்து வந்தனர். இந்தப் பின்னணியில் தான் துவங்குகிறது ஹுக்ஹ் கிளாசின் கதை.கிளாசின் மனைவி டகோடாவின் அரிகாரா பூர்வீகக்குடியை சேர்ந்தவள். அவர்களுக்கு பிறந்தது கலப்பு இன மகன். தன் குடும்பத்தை கொள்ள வந்த பிரெஞ்சு படை வீரனை கொன்ற காரணத்தினாலும, பழங்குடி மக்களிடம் கரிசனம் கொண்டதாலும் வெள்ளையர்களின் அவநம்பிக்கைக்கு ஆளாகிறான். இருப்பினும் வேட்டையிலும், சுவடுபற்றிச் செல்லுவதிலும் தேர்ந்து இருபதினால், தோல் வேட்டைக்கு செல்லும் குழுவுக்கு வழிகாட்டியாக பணி புரிகிறான்.

பிளாட்ட் நதியின் கரையில் முகாமிட்டிருக்கும் கிளாசின் வேட்டைகூட்டம் அரிகாரா வினரால் மூர்கத்தனமாக தாக்கப்படும் காட்சியிலிருந்து ஆரம்பாகிறது படம். நேர்த்தியான கத்தரிப்பற்ற காட்சியமைப்பின் மூலம் இதை நம் கண் முன் நிறுத்த முயற்சி செய்துள்ளார் மெக்சிக்க இயக்குனர் அலேஹான்றோ இனாரித்து. பல கூட்டாளிகளை இழந்து அங்கிருந்து தப்பித்து படகு மூலம் செல்கிறார்கள். ஒரு சில குதிரைகளையும் வேட்டையாடிய தோல் மூட்டைகளையும் கூடவே எடுத்து செல்கிறார்கள். ஊர் திரும்பும்போது பணம் கிடைக்க தோல் வேண்டுமே!

மழையிலும் சகதியிலும் காட்டைக் கடந்து செல்கிறார்கள். அங்கு ஒரு தாய் கரடி கிளாசை வெறியுடன் தாக்கி கிழித்தெரிகிறது. உடல் முழுவதும் சதை கிழிந்து காயங்கள், தொண்டையை பிய்த்து ஊற்றாய் ரத்தம், முறிந்த கால்கள் என செயலிழந்து மயங்கி கிடக்கிறான். வேட்டைக்கூட்டத்தலைவன் கேப்டன் ஹென்றி அவனுக்கு இயன்ற அளவு சிகிச்சை அளித்து காப்பாற்ற முயல்கிறான்.

மறு நாள் கிளாசை மரக்கட்டைகளால் ஆன தூக்குப் படுக்கையில் வைத்து பயணத்தை தொடர்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் காட்டை விட்டு விரைவில் வெளியேற முடியாது என்பதினால் கேப்டன் ஹென்றி கிளாஸ் உடன் ப்ரிஜெர்   பிட்ச்ஜெரால்த் என இருவரை தங்க வைத்துவிட்டு மற்றவர்களுடன் கிளம்பி செல்கிறான். கிளாசின் மகன் ஹாக்கும் தங்கிவிடுகிறான்.

கிளாசை முடிந்தால் காப்பாற்றுங்கள், இறந்துவிட்டால் தக்க மரியாதை உடன் புதைத்து விடுங்கள் என்று கூறிவிட்டு செல்லும் கேப்டன் ஹென்றி யின் பேச்சை மீறி கிளாசை கொல்ல முயல்கிறான் பிட்ஸ் ஜெரால்ட். தடுக்க முயலும் அவன் மகன் ஹாக்கை கொல்கிறான். தன கண் முன்னே இதை கண்டாலும் ஏதும் செய்ய முடியா நிலையில் கட்டிப் போடப்பட்டு இயலாமையுடன் வேடிக்கை பார்கிறான் கிளாஸ். ப்ரிஜெர் இடம் அரிகாரா டாகுகிரார்கள் என்று பொய் சொல்லிவிட்டு கிளாசை ஒரு குழியில் தள்ளிவிட்டு கிளம்புகிறார்கள். இங்கிருந்து படம் கிளாசின் உயிர் போராட்டங்கள், மீட்சி, வஞ்சகம் தீர்க்கும் பயணம் என்று செல்கிறது.

லுபெஸ்கியை பற்றி தனியாக ஒரு கட்டுரை வேண்டும். தற்போது இயங்கி வரும் ஒளிப்பதிவாளர்களில் மிகச் சிறந்தவர் என்றே நினைக்கிறன். ரோஜர் டீகின்ஸ் ஐ ஈடு செய்யும் திறமை. அவர் டேறேன்சே மல்லிக் உடன் பனி புரிந்த படங்களின் தாக்கம் இதில் உள்ள தியனமிகு காட்சிகளில் தெரிகிறது. குறிப்பாக Tree of Life, டு தி வொண்டெர் போன்ற படங்கள்.

Leave a comment